தைப்பூசம்
தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் பூசம் நட்சத்திரம் பெளர்ணமி அன்று வரும். இவ்விழா "தமிழர் திருவிழா"வாக அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் தமிழர்கள் வசிக்கும் இடமெல்லாம் இவ்விழா சிறப்பாக நடைபெறும். இவ்விழா இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் நாடுகளிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
வரலாறு:
சூரபத்மன், தாரகாசுரன் மற்றும் சிங்கமுகன் ஆகிய மூன்று அரக்கர்களும் சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தனர். இதனால் மனம் உருகிய எம்பெருமான் அவர்களுக்கு அருள் பாவித்தார். ஒரு கட்டத்தில் அசுரர்கள் தேவர்களை சிறைபிடிக்க தொடங்கினர். இதனால் அச்சம் அடைந்த தேவர்கள் பிரம்மதேவரையும் நாராயணரையும் நாடினர். அவர்கள் தேவர்களை சிவபெருமானிடம் சரணாகதி அடையுங்கள் என்றார்கள்.
தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எம்பெருமான் தன் நெற்றிகண் வாயிலாக ஆறு தீப்பிழம்புகளை உருவாக்கினார் . அந்த ஆறு தீப்பிழம்புகள் தான் ஆறு குழந்தைகளாக மாறி கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டனர். அந்த ஆறு குழந்தைகளுக்கும் கார்த்திகை பெண்கள் எல்லாவித போர்கலைகளையும் கற்றுகொடுத்தனர். ஒரு நாள் அன்னை பார்வதிதேவி குழந்தைகளை காண சென்ற போது ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்க ஆறு குழந்தைகளும் ஒருவராக மாறினர். அந்த ஒருவன் தான் தமிழ் கடவுள் முருகன்.
அசுரர்களின் பாவக்குடம் நிறைந்து அவர்களின் அழிவுகாலம் வந்த போது பழனியில் ஆண்டிக்கோலத்தில் இருந்த முருகனுக்கு ஞானவேலை கொடுத்தார் அன்னை பார்வதி தேவி. அப்படி அந்த ஞானவேல் கொடுக்கப்பட்ட தினமே தைப்பூச தினமாகும். அந்த ஞானவேலை கொண்டு முருகன் அசுரனை திருச்செந்தூரில் வதம் புரிந்தார். அன்னை பார்வதி ஞானவேலை பழனியில் முருகபெருமானுக்கு வழங்கியதால் தைப்பூசத்திருநாள் இங்கு மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
வழிபாட்டுமுறை:
தைப்பூசம் தமிழர்களின் பாரம்பரியத் திருவிழா. தமிழகம் முழுவதும் வேளாண் குடிகள் நிறைந்த பூமி. தை மாதம் அறுவடைக்காலம். மக்கள் தங்கள் வயல்களில் விளைந்த விளைபொருள்களை முருகனுக்குச் சமர்ப்பிக்கும் பொருட்டுக் காவடி எடுத்துக்கொண்டுவந்து முருகனை வழிபட்ட தினம் தைப்பூசம்.
காவடி எடுப்பது பழனி திருதலத்தில் மிகவும் சிறப்பானது. பக்தர்கள் அனைவரும் தங்களது பக்தியை பாதயாத்திரை மூலமாகவும் அலகு குத்துதல் மூலமாகவும் வெளிபடுத்துவர்.
அவ்வாறு செல்ல இயலாதவர்கள் வீட்டில் இருந்தே விரதம் மேற்கொள்வார்கள். அதிகாலையில் எழுந்து வீட்டை சுத்தம் செய்து நீராடி விட்டு திருநீறு அணிந்து மனமுருகி முருகனை வழி படவேண்டும். காலை மாலை இரு வேலையும் பாலும் பழமும் உண்டு, மாலையில் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதுவும் இயலாதவர்கள் முருகனை நினைத்து மனமுருகி வேண்டினால் வேலன் வேண்டியதை தருவான்.
முருகனுக்குரிய செவ்வாய் கிழமைகளிலும், கந்த சஷ்டி நாட்களிலும், கிருத்திகை அன்றும், தைப்பூசம் அன்றும் முருகனுக்குரிய வேறு சில நாட்களிலும் கீழே உள்ள துதியை கூறுவதன் மூலம் நம் வாழ்வில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் பறந்தோடு.
துன்பங்களை பறந்தோட செய்யும் முருகன் துதி:
ஷண்முகா சரவணா ஸ்வாமிநாதா
வேல் வேல் வேலவனே வேலா நீ வா
கந்தனே கடம்பனே கார்த்திகேயனே
வேல் வேல் வேலவனே வேலா நீ வா
அழகனே அமுதனே ஆறுபடையோனே
வேல் வேல் வேலவனே வேலா நீ வா
குமரனே குருபரா குறத்தி மணாளா
வேல் வேல் வேலவனே வேலா நீ வா
அப்பனே ஆதிமூலமே ஆவினன்குடியோனே
வேல் வேல் வேலவனே வேலா நீ வா
ஐயனே ஐங்கரன் தம்பியே ஈசன்மகனே
வேல் வேல் வேலவனே வேலா நீ வா
கந்தனே கிரிராஜனே கிருபாநிதியே
வேல் வேல் வேலவனே வேலா நீ வா
தயாபரனே தண்டாயுதபாணியே தகப்பன்சாமியே
வேல் வேல் வேலவனே வேலா நீ வா
வெற்றி வேலவனே வேத முதல்வனே
ஐயப்ப சோதரனே வேலாயுதனே நீ வா.
முருகா 🙏🙏🙏
ReplyDeleteThat kid murugan pic:)
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDeleteவாழ்த்துக்கள்
Superb. Very informative
ReplyDeleteவாழ்த்துக்கள் உங்களுடைய முயற்சி
ReplyDeleteஅப்பேனே முருகா 🙏🏻🙏🏻🙏🏻
ReplyDeleteArumai arumai
ReplyDeleteMuruga
ReplyDelete